water supply meeting

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் மாநகராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்,  மாநகரப்பொறியாளர் திரு.ஆ.லட்சுமணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் திரு.உதயசிங், ஆலோசகர் திரு.சம்பத்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.