HON'BLE MAYOR INSPECTION 3- 07.02.2024

 
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.88க்குட்பட்ட ஜே.ஜே.நகர் பிரதான சாலையில் மூலதன மானிய நிதி(CGF) திட்டத்தின்கீழ் ரூ.329 இலட்சம் மதிப்பீட்டில் 1600 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் கட்டுமானப்பணி நடைபெற்றுவருவதை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியை விரைவாகவும், தரமாகவும் செய்துமுடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் திருமதி.ர.தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் திரு.செந்தில்குமார், திரு.பாபு, உதவி ஆணையர் திரு.பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், உதவி பொறியாளர் திரு.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர் 07.02.2024.