Corporation wards delimitation meeting - Collectorate

நேற்று  (01.02.2018) கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளின் மறுவரையறை ஆணையத்தின் மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டத்தில் தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தின் தலைவர் திரு.எம்.மாலிக்பெரோஷ்கான்,  இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள் தலைமையில் கோயம்புத்தூர்மாநகராட்சி வார்டுகள் மறுவரையறை பட்டியல் குறித்த பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகளின் கருத்துக்கள் மற்றும் ஆட்சபனைகள் கேட்டறிந்த போது எடுத்த படம். இக்கூட்டத்தில் தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தின் உறுப்பினர்களான நகராட்சி ஆணையர் திரு.கோ.பிரகாஷ்  இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி இயக்குனர் திரு.கா.பாஸ்கரன் இ.ஆ.ப., தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தின் உறுப்பினர் - செயலர் திரு.த.சு.ராஜசேகர் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.ந.ஹரிஹரன் இ.ஆ.ப., திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கே.எஸ்.பழனிசாமி  இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன்  இ.ஆ.ப., துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி, அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.