Commissioner road inspection 04.12.2023.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.10க்குட்பட்ட சத்தி சாலை, அம்மன் கோவில், சித்ரா நகரில் மாநில நிதி கழக (SFC-State Financial Corporation) திட்டத்தின்கீழ் ரூ.51.68 இலட்சம் மதிப்பீட்டில் 1.702 மீட்டர் தொலைவிற்கு மொத்தம் 11 இடங்களில் தார் சாலைகள் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், மாநகரப் பொறியாளர் திரு.முருகேசன், உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் திரு.எழில், உதவி பொறியாளர் திரு.சக்திவேல் ஆகியோர் உள்ளனர் 04.12.2023.