COMMISSIONER INSPECTION 24.01.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.83க்குட்பட்ட பழைய தபால்நிலைய சாலையில் பாதாள சாக்கடை மற்றும் மனித கழிவுகளை அகற்றும் ரோபோடிக் என்ற நவீன இயந்திரங்களின் மூலம் பாதாள சாக்கடை தூய்மைப் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் ஆய்வு செய்து, பணிகள் குறித்து கேட்டறிந்தார். உடன் உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.சதீஷ்குமார், சுகாதார ஆய்வாளர் திரு.ஸ்ரீரங்கராஜ் ஆகியோர் உள்ளனர் .