COMMISSIONER INSPECTION 12.01.2024

கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.மருத்துவக்கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூடைப்பந்து உள்விளையாட்டு அரங்கம் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஓய்வறை உள்ளிட்டவைகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு.மேகநாத் ரெட்டி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் திரு.அருணா, மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி, திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.ரகுகுமார், பி.எஸ்.ஜி.உடற்கல்வி இயக்குநர் திரு.பழனிசாமி, மாநகராட்சி உதவி ஆணையர் திருமதி.கவிதா, சுகாதார ஆய்வாளர் திரு.ஜெரால்டு சத்யபுனிதன் ஆகியோர் உள்ளனர் 12.01.2024.