COMMISSIONER INSPECTION 07.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண். 12க்குட்பட்ட சுப்பநாயக்கன்புதூரில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் (TURIP 2023-24) ரூ.31 இலட்சம் மதிப்பீட்டில் 450 மீட்டர் தொலைவிற்கு புதிதாக தார் சாலை பணி நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாநகரப் பொறியாளர் திரு.முருகேசன், உதவி ஆணையர்(பொ)திரு.எழில், உதவி பொறியாளர் திரு.உத்தமன் ஆகியோர் உள்ளனர் 07.02.2024.