Commissioner inspection

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட சத்தி சாலை, கணபதி, கேவிஜி நகர் முதல் எஸ்.எம்.ஆர்.டேங்க் வரை சாலை தடுப்பு (சென்டர் மீடியன்) பகுதியில் ஒரு தெரு விளக்கு கம்பத்திற்கு 2 விளக்குகள் வீதம் 50 தெரு விளக்கு கம்பங்களுக்கு மொத்தம் 100 எண்ணிக்கையிலான தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் மாநகரப் பொறியாளர் திரு.முருகேசன், உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் திரு.எழில், உதவி பொறியாளர்கள் திரு.சக்திவேல், திரு.இளங்கோ ஆகியோர் உள்ளனர் 04.12.2023.