COIMBATORE CORPORTION -10.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.92-க்குட்பட்ட பி.கே.புதூர் பாலு கார்டன் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.47 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா உள்விளையாட்டு அரங்கத்தினை மாண்புமிகு மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் அவர்கள் மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், முன்னாள் தொண்டாமுத்தூர் பேரூராட்சித்தலைவர் திரு.ரவி, தெற்கு மண்டலத்தலைவர் திருமதி.ர.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர் திரு.இரா.கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் திரு.செந்தில்குமார், திரு.பாபு, திரு.அஸ்லாம் பாஷா, திரு.முருகேசன், திரு.அகமது கபீர், உதவி ஆணையர் திரு.பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 10.02.2024.