COIMBATORE CORPORATION NEWS - 23.01.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.99க்குட்பட்ட போத்தனூர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெறுவதையொட்டி அப்பகுதியிலுள்ள ரயில்வே பாதையை பாதாள சாக்கடை குழாய் கடக்கும் இடத்தை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் திருமதி.ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர் திரு.கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர் திரு.அஸ்லாம் பாஷா, உதவி ஆணையர் திரு.பிரேம் ஆனந்த், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், எல் & டி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர் 23.01.2024.