COIMBATORE CORPORATION -09.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.97-க்குட்பட்ட ஈச்சனாரி ஐயப்பா நகரில் நமக்கு நாமே 2023-24 திட்டத்தின்கீழ் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் இன்று (09.03.2024) பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள். உடன் மரியாதைக்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், ஆளுங்கட்சித்தலைவர் திரு.கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், உதவி பொறியாளர் திரு.சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.