CCMC NEWS 9 - 11.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.31-க்குட்பட்ட பெரியசாமி லே-அவுட் பகுதியில் நடைபெற்றுவரும் சாலை மேம்பாட்டு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (11.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாமன்ற உறுப்பினர் வைரமுருகன் என்கிற திரு.முருகன், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர்கள் திரு.கனகராஜ், திரு.பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.