CCMC NEWS 8- 21.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.82 கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கோயம்புத்தூர் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.19.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மைய கட்டடம் மற்றும் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.70.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி உட்பட பலர் உள்ளனர்.