CCMC NEWS 7 -22.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில், சித்தாபுதூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள், வாரணாசியில் கடந்த பிப்ரவரி 09, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 5 வது தேசிய அளவிலான QWAN KI DO CHAMPIONSHIP 2023-24 விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை இன்று (22.02.2024) மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.வித்யா ராமநாதன், மாநகராட்சி கல்வி அலுவலர் திரு.முருகேசன், பள்ளி தலைமையாசிரியர் திருமதி.மாலதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் ஆகியோர் உள்ளனர்.