CCMC NEWS 6 -22.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.41க்குட்பட்ட வடவள்ளி, பி.என்.புதூர் ராம்ஸ் நகர் பகுதியில் நகர்ப்புற சுகாதார துணை மைய நிதியின்கீழ் (UHSC) ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார மையம் கட்டடத்தை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (22.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி, உதவி ஆணையர் திருமதி.சந்தியா, செயற்பொறியாளர் திரு.இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா, உதவி பொறியாளர் திரு.ஐசக் ஆர்தர் ஆகியோர் உள்ளனர்.