CCMC NEWS 4 - 11.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட கதிரவன் நகர், போத்தனூர் சாரதாமில் சாலை மற்றும் ஹவுசிங்யூனிட், காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (11.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மரியாதைக்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், தெற்கு மண்டல தலைவர் திருமதி.ரெ.தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர் திரு.அப்துல்காதர், செயற்பொறியாளர்கள் திரு.இளங்கோவன், திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், உதவி பொறியாளர் திரு.சபரிராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.