CCMC NEWS 3 - 11.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.98-க்குட்பட்ட போத்தனூர் அம்மா உணவக வளாகத்தில் இன்று (11.03.2024) தூய்மைப்பணிகளில் சிறப்பாக பணியாற்றிய மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் சிறப்பாக வரிஈட்டிய வரிவசூலர்கள் உள்ளிட்டவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், வழங்கினார். உடன் மரியாதைக்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மாமன்ற உறுப்பினர் திரு.உதயகுமார், செயற்பொறியாளர்கள் திரு.இளங்கோவன், திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், உதவி பொறியாளர் திரு.சபரிராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.