CCMC NEWS 28.08.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.98க்குட்பட்ட சுந்தராபுரம், சிட்கோ எல்.ஐ.சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், கொசு ஒழிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றவும், தேவையில்லாத பொருட்களை அகற்றி, பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபடுமாறு அறிவுரைகளை வழங்கினார். உடன் மரியாதைக்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் திருமதி.ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர் திரு.கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர் திரு.உதயகுமார், உதவி ஆணையர் திரு.அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.ஜெயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன், உதவி பொறியாளர்கள் திரு.சுந்தர்ராஜன், திரு.சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.