CCMC NEWS 24.01.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.81-க்குட்பட்ட இடையர் வீதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம்பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கும், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களிடம் அறிவுரை வழங்கினார். உடன் மாமன்ற உறுப்பினர் திரு.மனோகரன், உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.விமல்ராஜ், சுகாதார ஆய்வாளர் திரு.தனபால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 24.01.2023