CCMC NEWS 22.01.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண்.5க்குட்பட்ட காளப்பட்டி, வழியம்பாளையம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் கல்விநிதியிலிருந்து இரண்டு வகுப்பறைகள் கட்டுமானப்பணி நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அப்பள்ளியில் மேலும் கூடுதலாக வகுப்பறை கட்டுவதற்கு உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். உடன் மாமன்ற உறுப்பினர் திரு.நவீன்குமார், மாநகரப்பொறியாளர் திரு.முருகேசன், உதவி ஆணையர் திருமதி.கவிதா, உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, உதவி பொறியாளர் திரு.கணேசன், மண்டல சுகாதார அலுவலர் திரு.பரமசிவம் ஆகியோர் உள்ளனர் .
22.01.2024.