CCMC NEWS 21.09.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.72க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் ஆரோக்கியசாமி சாலையில் உள்ள மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தில் மாநகராட்சி மற்றும் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் 50 சதவீத பங்களிப்புடன் ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன கழிவறையை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். உடன் மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, நகரமைப்பு குழுத்தலைவர் திரு.சோமு (எ) சந்தோஷ், மாமன்ற உறுப்பினர் திரு.கார்த்திக் செல்வராஜ். ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.கிருஷ்ணன். மாநகர கல்வி அலுவலர் திரு.முருகேசன், உதவி ஆணையர் திருமதி.சந்தியா, உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, உதவி பொறியாளர் திரு.கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 21.09.2023