CCMC NEWS 21.02.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.58-க்குட்பட்ட நந்தா நகர் பிரதான சாலையின் மழைநீர் வடிகாலில் உள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றி தூர்வார மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.சுமித்ரா, உதவி ஆணையர் திரு.முத்துராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் திரு.சுந்தர்ராஜன், உதவி நகரமைப்பு அலுவலர் திரு.குமார், மண்டல சுகாதார அலுவலர் திரு.பரமசிவம், உதவி பொறியாளர்கள் திருமதி.யோகசித்ரா, திரு.கல்யாணசுந்தரம், சுகாதார திரு.முருகேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 21.02.2023