CCMC NEWS 20.06.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம். வார்டு எண்.71க்குட்பட்ட கண்ணுசாமி சாலையில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். உடன் மாமன்ற உறுப்பினர் திரு.அழகுஜெயபாலன், உதவி ஆணையர் திரு.சேகர், செயற்பொறியாளர் திரு.சுந்தர்ராஜன், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் திரு.இராமச்சந்திரன், உதவி பொறியாளர் திரு.கமலக்கண்ணன், சுகாதார ஆய்வாளர் திரு.சலைத் ஆகியோர் உள்ளனர் 20.06.2023