CCMC NEWS 2-27.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.68க்குட்பட்ட கிராஸ்கட் சாலையில் கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் தனியார் (நேர்டு) நிறுவனம் சார்பில் பாதாள சாக்கடை அடைப்பினை ரோபோ இயந்திரம் மூலம் சரிசெய்யும் செயல்முறை விளக்கத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (27.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.நடராஜன் ஆகியோர் உள்ளனர்.