CCMC NEWS 17.02.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.85-க்குட்பட்ட வெங்கடாசலபதி நகரில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம்பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களிடம் அறிவுரை வழங்கினார். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.சரளா, உதவி ஆணையர் (பொ) திருமதி.மாணிக்கம், உதவி செயற்பொறியாளர் திரு.கே.கருப்புசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.ஜெயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன், உதவி பொறியாளர்கள் திருமதி.சரண்யா, திரு.சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் 2GT GT GOT 17.02.2023.