CCMC NEWS 16-09-2023

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.82க்குட்பட்ட ராஜா வீதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் 1.940 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார்சாலை அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, சாலை அமைக்கப்படும் நீளம், அகலம் குறித்து கேட்டறிந்து, தார்சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தாரின் வெப்பத்தை வெப்ப அளவிடும் கருவி கொண்டு ஆய்வு செய்தார். உடன் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத்தலைவர் திருமதி.வி.பி.முபசீரா, செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.பிரபாகரன், உதவி பொறியாளர் திருஃபார்மான் அலி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.