CCMC NEWS 15-09-2023

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட கே.வி.கே.நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ரூ.41.70 இலட்சம் மதிப்பீட்டில் நான்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானப்பணியினை மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், அவர்கள் முன்னிலையில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். உடன் தெற்கு மண்டல தலைவர் திருமதி.ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர் திரு.கார்த்திகேயன், உதவி ஆணையர் திரு.ஜே.பிரேம்ஆனந்த், செயற்பொறியாளர் திருமதி.சசிப்பிரியா, உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.ஜெயலட்சுமி. மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன், உதவி பொறியாளர் திரு.சபரிராஜ், சுகாதார ஆய்வாளர் திரு.முருகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 15.09.2023