CCMC NEWS 14-09-2023

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.86-க்குட்பட்ட உக்கடம், புல்லுக்காடு பகுதியில் உள்ள மக்கும் குப்பைகளைக் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை (Micro Composting Centre) மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். உடன் தெற்கு மண்டல தலைவர் திருமதி.ரெ.தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர் திரு.அஹமதுகபீர், உதவி ஆணையர் திரு.ஜே.பிரேம்ஆனந்த், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.ஜெயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன், உதவி பொறியாளர்கள் திரு.சுந்தர்ராஜன், திரு.சக்திவேல், சுகாதார ஆய்வாளர் திரு.தனபாலன் ஆகியோர் உள்ளனர்