CCMC NEWS 13.02.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.7க்குட்பட்ட கோல்டு வின்ஸ் சாலையில் IOCL நிறுவனத்தின் மூலம் குடிநீர் குழாய் பதிக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாக செய்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார். உடன் மாமன்ற உறுப்பினர் திரு.கோவிந்தராஜ், உதவி ஆணையர் திரு.முத்து இராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் திரு.சுந்தர்ராஜன், உதவி நகரமைப்பு அலுவலர் திரு.எஸ்.குமார், உதவி பொறியாளர் திரு.குமார், சுகாதார ஆய்வாளர் திரு.சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 13.02.2023.