CCMC NEWS 11 - 21.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அண்ணா தினசரி மார்க்கெட் வளாகத்தில் ரூ.3.86 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மார்க்கெட் கட்டடங்களை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி உட்பட பலர் உள்ளனர்.