CCMC NEWS 1- 27.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம் வார்டு எண்.72க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் ஆரோக்கியசாமி சாலையில் ரூ.2.38 கோடி மதிப்பீட்டில் 30 எண்ணிக்கையிலான கடைகள் கொண்ட மாநகராட்சி புதிய வணிகவளாகம் கட்டப்படவுள்ள இடத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (27.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாமன்ற உறுப்பினர் திரு.கார்த்திக் செல்வராஜ், உதவி ஆணையர் திருமதி.சந்தியா, உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா, உதவி பொறியாளர் திரு.கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.