CCMC NEWS 1- 26.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட கே.வி.கே.நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாநகராட்சி கல்வி நிதியின்கீழ் ரூ.48.00 இலட்சம் மதிப்பீட்டில், கூடுதலாக மூன்று வகுப்பறைகள் கட்டும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (26.02.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் தெற்கு மண்டல தலைவர் திருமதி.ர.தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர் திரு.குணசேகரன், உதவி ஆணையர் திரு.பிரேம் ஆனந்த், செயற்பொறியாளர் (பொ) திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.