CCMC NEWS 1- 22.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.72க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதியில் ரூ.98.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாதிரி பள்ளிக்கான பிரத்யேக தங்கும் விடுதி கட்டும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (22.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் திரு.கார்த்திக் செல்வராஜ், உதவி ஆணையர் திருமதி.சந்தியா, செயற்பொறியாளர் திரு.இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா, உதவி பொறியாளர் திரு.கமலக்கண்ணன் ஆகியோர் உள்ளனர்.