CCMC NEWS 1- 20.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.71க்குட்பட்ட வெங்கடசாமி லே-அவுட் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதியிலுள்ள வீடுகளில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார். உடன் மண்டல சுகாதார அலுவலர் திரு.ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் திரு.சலைத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 20.02.2024.