CCMC NEWS - 09.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.99-க்குட்பட்ட வெள்ளலூர் உரக்கிடங்கு பகுதியில் உங்கள் தொகுதியில் முதல்வர் 2023-24 திட்டத்தில், மாநகராட்சி பொதுநிதியின்கீழ் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் ABC மையம் கட்டுமானப் பணியினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் இன்று (09.03.2024) தொடங்கி வைத்தார்கள். உடன் மரியாதைக்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், ஆளுங்கட்சித்தலைவர் திரு.கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் திரு.அஸ்லாம்பாஷா, திரு.உதயகுமார், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், உதவி பொறியாளர் திருமதி.சரண்யா, தன்னார்வலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.