CCMC News - 04.11.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.100-க்குட்பட்ட மேட்டூர், ஆடிட்டர் வீதியில் 265 மீட்டர் தொலைவிற்கு ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி பொறியாளருக்கு உத்தரவிட்டார். உடன் தெற்கு மண்டல தலைவர் திருமதி.ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சித் தலைவர் திரு.கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் திரு.அப்துல் காதர், திரு.செந்தில்குமார், திரு.பாபு, உதவி ஆணையர் திரு.அண்ணாதுரை, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் திரு.ஆறுமுகம், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.சத்யா, சுகாதார அலுவலர் திரு.ராமு, உதவி பொறியாளர்கள் திரு.கணேசன், திரு.கனகராஜ், சுகாதார ஆய்வாளர் திரு.தனபால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 04.11.2022.