Amrut Scheme 2.0 - Women for water, Water for Women campaign Training

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ் மகளீர் சுய உதவி குழுக்களின் (SHGs) 100 பெண் உறுப்பினர்களுக்கு வெள்ளியங்காடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிடவும், ஜல் தீபாவளி "தண்ணீருக்கான பெண்கள் பெண்களுக்கான தண்ணீர்" (Women for Water, Water for Women Campaign) குடிநீர் பயன்பாடு தொடர்பான பயிற்சியினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், மாநகரப் பொறியாளர் (பொ) திரு.முருகேசன், உதவி பொறியாளர் திரு.சத்தியமூர்த்தி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர் 08.11.2023.