Water Line Disconnected photo

இன்று  (05.03.2018) மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன் இ.ஆ.ப., அவர்களின் உத்தரவின்படி கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 6 - க்குட்பட்ட லூனா நகரில் உள்ள அசோசியேட் மெட்டாலாஜிக்கல் நிறுவனம், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2017 - 2018  ஆண்டுக்கான (முதல் மற்றும் இரண்டாம் தவணை) சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் மொத்தம் ரூ.50,878 /- ஐ செலுத்தாத காரணத்தினால் வரிதாரரின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.