Urban Developement News - R S Puram

இன்று (29.10.2017) மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்,ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள்,மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள  இராஜஸ்தானி  சங்க மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,சங்கத்தினரால் புதிதாக வாங்கப்பட்ட இலவச அமரர் ஊர்தி ஆம்புலன்ஸ் வாகனத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தபோது எடுத்த படம். உடன் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப அவர்கள்,துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள்,முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும்   இராஜஸ்தானி சங்க நிர்வாகிகள்  உள்ளனர்.