TWAD public meeting

கோயம்புத்தூர்  மாநகராட்சி சரவணம்பட்டி பிரிவு அலுவவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பாக மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட துடியலூர், வெள்ளக்கினர், சின்னவேடம்பட்டி, விலங்குறிச்சி மற்றும் களப்பட்டி பகுதிகளில் ரூ.189.57 கோடியில் தொடங்கப்படவுள்ள குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் திரு.சொக்கலிங்கம், நிர்வாகப் பொறியாளர்கள் திரு.ரங்கராஜன், திரு.சம்பத்குமார், மாநகராட்சி பொறியாளர் திரு.நடராஜன், உதவி நிர்வாகப் பொறியாளர் திரு.பிரபாகர், உதவி பொறியாளர் திரு.சக்திவேல், திரு.எழில் ஆகியோர் கலந்து கொண்டு இத்திட்டம் பற்றிய பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்.