secretary Inspection

கோயம்புத்தூர் மாநகராட்சி உக்கடம் பெரியகுளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச்செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள், மாநகரப்பொறியாளர் திரு.ஆ.லட்சுமணன் ஆகியோர் உடனுள்ளார்கள்