Meeting reg - Swachh Survekshan 2018

கோயம்புத்தூர் மாநகராட்சி, பிரதான அலுவகக் கூட்டரங்கில் இன்று  (14.02.2018)   ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜய்கார்த்திகேயன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய அளவில் தூய்மையான நகரங்கள் தரவரிசைப்பட்டியல் - ஸ்வச் சர்வேக்ஷன் 2018 (Swachh Survekshan 2018 ) கணக்கெடுப்பில், கோவை மாநகராட்சி சிறந்த தரவரிசைப்பட்டியல் பெறுவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம். இக்கூட்டத்தில் கண்காணிப்பு பொறியாளர் திரு. என்.நடராஜன், செயற்பொறியாளர் திட்டங்கள் திரு.ரவிச்சந்திரன், செயற்பொறியாளர்கள்  திருமதி.என்.பார்வதி, திரு.ஞானவேல், திரு.சரவணன்,  மாநகர நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ் குமார் அவர்கள், உதவி ஆணையர் கணக்கு திரு.சுந்தர்ராஜன், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், மாநகராட்சி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.