June 06 - Hon'ble LA Minister Review Meeting

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சியில் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள், சாலைப்பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளின் மேம்பாட்டுப் பணிகள் குறித்து மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்களின் தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.ராசாமணி இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.பி.ஆர்.ஜி.அருண்குமார் அவர்கள், திரு.அம்மன் கே.அர்ச்சுணன் அவர்கள், திரு.எட்டிமடை.ஏ.சண்முகம் அவர்கள், துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் மற்றும் அலுவலர்கள் உடனுள்ளார்கள்.