Hon'ble Mayor Inspection - ward no. 93

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.93க்குட்பட்ட மணிகண்டன் நகர் பகுதியில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் (TNSUDP) ரூ.3.24 கோடி மதிப்பீட்டில் 6.27 கிலோ மீட்டர் தொலைவிற்கு 45 இடங்களில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் திருமதி.ரெ.தனலட்சுமி, தெற்கு மண்டல உதவி ஆணையர் திரு.அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள் திரு.பொ.இளஞ்சேகரன், திரு.பாபு, திரு.அப்துல் காதர், உதவி செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி பொறியாளர் திரு.கனகராஜ், மண்டல சுகாதார ஆய்வாளர் திரு.ராமு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.