Corporation DC Inspection

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், 77 வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் வடக்கு ஹவுசிங்யூனிட் பகுதியில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் சீராக விநியோகிக்கப்படுகிறது என்பது குறித்து மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் பொதுமக்களிடம் நேரில் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்கள். தெற்கு மண்டல உதவி ஆணையர் திரு.தி.ரா.ரவி, நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனுள்ளார்கள்.