corporation commissioner meeting

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் தூய்மைப்பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்,  மாநகரப்பொறியாளர் திரு.ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் (திட்டம்) திரு.ரவிச்சந்திரன், நகர் நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், மண்டல உதவி ஆணையர்கள் திரு.செந்தில்குமார் ரத்தினம், திரு.டி.ஆர்.ரவி, திரு.ஏ.ஜெ.செந்தில் அரசன் மற்றும் மண்டல சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.