Coimbatore Corporation - News 2 08.08.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.52க்குட்பட்ட சிங்காநல்லூர், கல்லூரி நகரில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் நகர்நல மையம் கட்டுமானப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளருக்கு உத்தரவிட்டபோது எடுத்த படம். உடன் கிழக்கு மண்டல தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், உதவி ஆணையர் திரு.முத்து இராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் திரு.சுந்தர்ராஜன், உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.ஜெயலட்சுமி, உதவி பொறியாளர்கள் திரு.கல்யாணசுந்தரம், திருமதி.ஜெகதீஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகா, சுகாதார ஆய்வாளர் திரு.ஜெரால்டு சத்யபுனிதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 08.08.2022.