Coimbatore Corporation - News 1 08.08.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.52க்குட்பட்ட சிங்காநல்லூர், கல்லூரி நகரில் குப்பைகளை மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து பெறப்படும் கழிவுகளை TATA AC வாகனங்கள் மூலம் குப்பைகிடங்கிற்கு கொண்டு செல்லும் சிறப்பு தூய்மைப்பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் கிழக்கு மண்டல தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், உதவி ஆணையர் திரு.முத்து இராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் திரு.சுந்தர்ராஜன், உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.ஜெயலட்சுமி, உதவி பொறியாளர்கள் திரு.கல்யாணசுந்தரம், திருமதி.ஜெகதீஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகா, சுகாதார ஆய்வாளர் திரு.ஜெரால்டு சத்யபுனிதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 08.08.2022.