Coimbatore Corporation - Commissioner Inspection4 - 30.07.22

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், வார்டு எண்.35க்குட்பட்ட இடையர்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானைதமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் திரு.சம்பத், உதவி ஆணையாளர் திரு.சேகர், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.கலாவதி, உதவி பொறியாளர் திரு.ஜீவராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.பரமசிவம், சுகாதார ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 30.07.2022.