Coimbatore Corporation - Commissioner Inspection2 - 28.07.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.4க்குட்பட்ட சின்னமேட்டுப்பாளையம் பகுதியில் ரூ.174 இலட்சம் மதிப்பீட்டில் 1.83 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணியை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், உதவி ஆணையாளர் திருமதி.மோகனசுந்தரி, செயற்பொறியாளர் திரு.முருகேசன், உதவி செயற்பொறியாளர் திரு.செந்தில்பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் திரு.இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 28.07.2022.